புற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்களே!


இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 மக்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.


உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வழிமுறைகள் வருமாறு:

ஆரோக்கியமான உடல் எடை, சுறுசுறுப்பாக இருத்தல், உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல், தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல், மாமிசம் மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல் ஆகும்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் உறுதி கூறுகின்றார்.
Previous
Next Post »

More News