இரும்புப்
பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின்
முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சரின் இறுதிக் கிரியைகள் இன்று
(17) இடம்பெறவுள்ளன. இவரது
இறுதிக் கிரியைகளில் 170 நாடுகளைச் சேர்ந்த 2,300 பேர் கலந்து கொள்ளவுள்ளதாக
பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்வின்
பாதுகாப்பு பணிகளுக்காக 4,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மார்கரெட்
தாட்சரின் கடந்த 8ஆம் திகதி
காலமானார். இவர் இறக்கும் போது
அவருக்கு 87 வயதாகும். மார்கரெட் தாட்சரின், கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவியாகவும் இவர் இருந்தார்.
பிரிட்டனின்
முதலாவது பெண் பிரதமர் இவராவார்.
இவர் காலத்தில்தான் ஃபோக்லாண்ட் தீவுகள் தொடர்பில் ஆர்ஜண்டீனாவுடன்
பிரிட்டன் போரில் ஈடுபட்டு அதில்
வெற்றியும் பெற்றது.
1979 ஆம்
ஆண்டு தான் பதவி ஏற்றதை
அடுத்து பிரிட்டனின் அரசியல் அரங்கில் பல
மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார்.
சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட
மிகப்பெரிய பிரிட்டிஷ் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார்.
ConversionConversion EmoticonEmoticon