புகைபிடிப்பவர்கள்
அப்பாவி மக்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கிறார்கள்
புகைப்பிடித்தல்
இன்று உலகில் மனித உயிர்களைப்
பறிக்கும் கொடிய நோய்களில் முதல்
இடத்தை வகித்து வருகின்றது. இல
ங்கை உட்பட எந்தவொரு நாட்டின்
அரசாங்கமும் சிகரட் விற் பனையை
பொறுத்தமட்டில் ஒரு திரிசங்கு நிலையை
எதிர்நோக்கு கின்றன. சிகரட் விற்பனையை
தடை செய்தாலும் அரசாங்கம் அதன் மூலம் கிடைக்கும்
கோடான கோடி ரூபா வருமானத்தை
இழ க்கின்றது. அதே நேரத்தில் தேசிய
வருமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிகரட் விற்பனைக்கு அரசாங்கம்
விரும்பியோ, விரும் பாமலோ தடை
விதிக்காமல் இருந்தாலும் அதன் மூலமும் அரசாங்
கம் பெருமளவு பணத்தை சிகரட் பிடிப்பதனால்
நோய்வாய்ப்படும் தங் கள் நாட்டு
மக்களை குணப்படுத்துவதற்காக செலவிட வேண்டிய நிலையில்
இருக்கின்றது.
தேசிய வருமானத்தை விட நாட்டு மக்கள்
சுகதேகிகளாக இருப்பது அவ சியம் என்ற
உணர்வுடன் அரசாங்கம் விரைவில் இரண்டு சட்ட மூலங்களை
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு திட் டமிட்டு வருகின்றது.
இவ்விரு சட்ட மூலங்களும் நிறைவேற்றப்பட்
டால் நிச்சயமாக நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் சிகரட் விற்பனையும் வீழச்சியடையும்
என்று எதிர்பார்க்கப்படுகின் றது.
ஒவ்வொரு
சிகரட் பெக்கட்டிலும் புகைப்பிடிப்பதனால் ஏற்படும் ஆப த்தை புகைப்படங்களைப்
பயன்படுத்தி பிரசுரிப்பதற்கும், பொது இடங்களிலும், வேலைத்தளங்களிலும்
புகைப்பிடித்தலை முற்றாக தடை செய்வதற்கும்
இந்த சட்ட மூலங்கள் வகை
செய்யும். ஒருவர் புகைப்பிடிக்காமல் இருந்தாலும்
அவருக்கு அருகில் உள்ளவர் சிகரட்
புகைத்து, புகை சுருள்களை வெளியிடும்
போது அதனை தவிர்க்க முடியாமல்
சுவாசிக்கும் புகைப்பிடிக்காதவர்களும், சிறு பிள்ளைகளும் பெரும்
பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
சிகரட்
புகைப்பவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் அமர்ந் திருப்பவர்களுக்கும்
இந்த சிகரட் புகை நுரையீரலில்
புற்றுநோயை யும், மாரடைப்பு போன்ற
இருதய நோய்களும் ஏற்படுவதற்கும் பிர தான காரணமாகின்றன.
தாய்மார் புகைப்பதனாலும், கருப்பையில் இருக்கும் போது சிகரட் புகை
அதிகமாக இருக்கும் சுற்றாடலில் கர்ப்பிணித்தாய் இருந்தாலும் அதனால் பெருமளவு தாக்கம்
கருப் பையில் உள்ள குழந்தைகளை
தாக்குகின்றது. இதுவும் பிரசவத்தின் போது
பிரசவித்து ஓரிரு மாதங்களுக்குள் குழந்தைகள்
இறப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
புகைப்பிடிக்கும்
பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளின் நிறையும் மிக வும் குறைவாக
இருக்கும். அத்துடன் குழந்தைகள், பிள்ளைகள் மற் றும் பெரியவர்களுக்கு
மூச்சுக் குழாயில் சுவாசிப்பதற்கு முடியாத கஷ்ட நிலை
ஏற்படுவதற்கும் புகைத்தல் காரணமாக இருக்கின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள
ஓர் அறிக்கையில் புகையிலை மற்றும் புகைத்தலினால் ஒவ்வொரு
6 விநாடிகளுக்கு ஒருவர் உல கில்
எங்காவது ஒருநாட்டில் மரணிக்கிறார் என்று அறிவிக்கிறது. புகை
யிலை மற்றும் மதுபான சட்டம்
தொடர்பான தேசிய அதிகார சபை
சட்டம் இப்போது மும்மொழிகளிலும் மொழி
பெயர்க்கப்பட்டிருக் கின்றது.
இதுபற்றி
தகவல் தெரிவித்த பிரதி சுகாதார அமைச்சர்
லலித் திஸா நாயக்க, ஜனாதிபதி
அவர்களின் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவு
க்கு அமைய எங்கள் நாட்டில்
மக்களை நற்குணசீலர்களாக மன மாற்றம் செய்வதற்கு
மது ஒழிப்பு, புகைத்தல் ஒழிப்பு செயற்பாடு களை
மேற்கொள்வது அவசியமாகிறது என்றும் அதனை உடனடி
யாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் சுகாதார அமைச்சு படிப்படி
யாக ஜனாதிபதி அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறதென்று கூறினார்.
புகைத்தலினால்
பெரும்பாலும் வாயிலும், நுரையீரலிலும் புற்றுநோய் ஏற் படுகின்றது. மற்றவர்கள்
புகைத்தலினால் அருகில் இருக்கும் பிள்
ளைகளும் பாதிக்கப்படுவதனால் அவர்களின் பற்களில் உள்ள ஈறு கள்
முற்றாக அழிந்து போய் பற்சூத்தை
ஏற்பட்டு விரைவில் அவர் களின் பற்களை
அகற்ற வேண்டிய அவல நிலைக்கு
தள்ளப்படு கிறார்கள்.
புற்றுநோய்
பராமரிப்பு சங்கத்தின் தலைவரும் தேசிய புற்றுநோய் நிலை
யமான மஹரகமை ஆஸ்பத்திரியின் வைத்திய
நிபுணர் டாக்டர் சமாதி ராஜபக்ஷ
இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,
சிகரட் பெட் டிகளில் புகைத்தலினால்
பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்களை அச்சிடுவதன் மூலம் புகைப்பிடிப்பவர்களின் மனதில் ஒரு
சிறு தாக் கத்தை ஏற்படுத்தக்கூடியதாக
இருக்குமென்று கூறினார். ஒரு சிகரட் டில்
மனித உடம்புக்கு தீங்கிழைக்கும் 4000 வெவ்வேறு விதமான பொருட்கள் புகையிலையினால்
கலந்திருக்கின்றன என்றும் இவற் றில்
40 நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் வலுவுடையன என் றும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில்
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 40 சதவீதமானோர் புகையிலை அல்லது புகைத்தலுடன் தொடர்புடைய
வர்கள் என்றும் அவர் கூறினார்.
உலக சுகாதார ஸ்தாபனம் வெளி
யிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஒவ்வொரு
ஆண்டும் 5 மில்லியனுக் கும் கூடுதலான மக்கள்
புகையிலை தொடர்புடைய புற்றுநோயி னால் மரணிக்கிறார்கள் என்று
அறிவித்துள்ளது. 20 ஆவது நூற் றாண்டில்
புகையிலை மற்றும் புகைத்தலினால் நூறு
மில்லியன் மக் கள் மரணித்திருக்கிறார்கள்.
21ம் நூற்றாண்டில் புகைத்தலுக்கு முற் றுப்புள்ளி வைக்காவிட்டால்
புற்றுநோயினால் ஒரு பில்லியன் மக்
கள் மரணிப்பார்கள் என்றும் உலக சுகாதார
ஸ்தாபனம் எச்சரிக்கை செய்துள்ளது.
இத்தகைய
ஆபத்துக்களை உணர்ந்து நம்நாட்டவர்கள் புகைத்தலை அடியோடு கைவிடுதல் அல்லது
மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புகைத்தல்
அவசியமாகும்.
ConversionConversion EmoticonEmoticon