காணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு



காணாமல் போதல்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் அறிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 60 வீதமான காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் பாதுகாப்பு அமைச்சினால், காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுத் தளமொன்று உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.கடத்தல் அல்லது காhணமல் போதல் தொடர்பான 264 முறைப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.1990ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 80 வீதமான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்
Previous
Next Post »

More News