எஸ். எஸ். இசற் கான்
இலங்கை
ஒரு காலத்தில் கல்வித் துறையில் மிகவும்
முன்னேற்றமடைந்தநாடாகவும் முறையானதொரு கல்வித் திட்டத்தையும் ஒழுங்கான
அதன் நடைமுறைப்படுத்தலையும் கொண்டிருந்த நாடாகவும் திகழ்ந்தது. ஆனால் இன்று பல்வேறு
காரணங்களால் ஆரம்பக் கல்வி முதல்
உயர் கல்வி வரையும் தரக்குறைப்பாடும்
சிக்கல்களும் நிறைந்து காணப்படுகின்றன. கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும்
வியாபார தலையீட்டையும் அதன் விளைவால் ஏற்பட்டுள்ள
சிக்கல்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இன்று கல்வி ஒரு வியாபார
பொருளாக விற்பனை சந்தையில் கட்டுப்பாடற்று
பணம் தேடும் சில சில்லறை
முதலாளிகளின் கைகளில் முடங்கிக் கிடக்கின்றது
என்றால் மிகையாகாது. சர்வதேச பாடசாலைகள் என்ற
போர்வையில் இன்று நாடெங்கிலும் அங்கொன்றும்
இங்கொன்றுமாக தோன்றி வரும் 'கல்விக்
கடைகளை' நம்பி தமது பிள்ளைகளின்
எதிர்காலத்தை பலி கொடுத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்று
விழித்தெழுந்து தமது பிள்ளைகளின் சீரான
கல்விக்காக சிந்தித்து போராடுவது இன்று அவசியமாகியுள்ளது.
எனது இந்தக் கருத்தை தெளிவாக
புரிந்து கொள்வதற்கு இலங்கையில் இன்று இருக்கும் கல்வி
முறைகளை ஆராய்வது பொருத்தமாகும். தற்போது இலங்கையில் நடைமுறையிலிருக்கும்
பாடசாலைகளின் அமைப்பு முறைகளை எடுத்துப்
பார்த்தால் அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தேசிய
பாடசாலைகள் : இவை மத்திய அரசாங்கத்தின்
கீழ் கல்வி அமைச்சின் நேரடி
கண்காணிப்பில் இயங்குகின்றன. தமிழ் அல்லது சிங்கள
மொழி மூலம் கல்வி போதிக்கப்படும்
இப்பாடசாலைகள் ஒரு ஒழுங்கு முறையின்
கீழ் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பதால் பிள்ளைகளின் கல்வி ஒரு பொறுப்புள்ள
ஏற்பாட்டின் கீழ் உள்ளதெனலாம். இத்தகைய
பாடசாலைகளில் கொழும்பு ரோயல் கல்லூரி, டி.
எஸ். சேனநாயக்க கல்லூரி, முஸ்லிம் மகளிர் கல்லூரி என்பவற்றை
சொல்லலாம். இப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பொதுவாக பட்டப்படிப்பு பெற்றவர்களாகவும்
பயிற்சி பெற்றவர்களாகவுமே இருப்பதால் கல்வி தரத்தில் ஒரு
முறையான உயர்வைக் காணலாம்.
மாணவர்களுக்கான
அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்,
என்பன பொதுவாக எல்லா தேசிய
பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.
2. மாகாண
பாடசாலைகள் : இந்த பாடசாலைகள் தேசிய
பாடசாலைகளை விட தர நிர்ணயம்
குறைந்தவையாக இருந்தபோதும் இந்த பாடசாலைகளும் மாகாண
அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கி ஒரு பொறுப்பான
நிர்வாகத்தின் கீழ் அவற்றின் குறைநிறைகள்
சீர் செய்யப்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன. இந்த வகையான பாடசாலைகளில்
சிடபிள்யு. கண்ணங்கரா மகாவித்தியாலம், அல் ஹிதாயா மகா
வித்தியாலயம், டட்லி சேனநாயக்க மகா
வித்தியாலயம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தகைய
பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் பயிற்சிபெற்றவர்களாகவோ பட்டதாரிகளாகவோ இருப்பதால் கல்வி தரம் நன்கு
பேணப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கான அடிப்படை
வசதிகள் இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்,
என்பன அநேகமான மாகாண பாடசாலைகளிலும்
காணப்படுகின்றன. வசதிகள் மாகாணத்துக்கு மாகாணம்
வித்தியாசப் பட்ட போதும், இடைவேளைகளில்
மாணவர்கள் நெருக்கம் இன்றி அசைவதற்கான அடிப்டை
வசதிகள் பொதுவாக எல்லா பாடசாலைகளிலும்
உள்ளன.
3. தனியார்
அல்லது பகுதி தனியார் பாடசாலைகள்
: இவை முற்றிலும் தனிப்பட்ட நிர்வாக அபைம்பின் கீழ்
அரசாங்கத்தின் பகுதி உதவியோடு அல்லது
முற்றிலும் தனியார் முதலீட்டோடு இயங்குகின்றன.
புனித தோமஸ் கல்லூரி, புனித
ஜோஸப் கல்லூரி, ஸஹிரா கல்லூரி போன்ற
பிரபல கல்லூரிகளை குறிப்பிடலாம். இப்பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து ஒரு குறித்த தொகைகளை
மாதாந்தம் அறவிட்டாலும் மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பாடசாலைகளின் எதிர்காலத்துக்கும் நம்பகமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளதோடு
பொதுவாக தரமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களே
கல்வி கற்பிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் சீராக அமையும் வாய்ப்பு
உள்ளதெனலாம். மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்
என்பன கொதுவாக எல்லா தனியார்
பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.
4. சர்வதேச
பாடசாலைகள் : சர்வதேச பாடசாலைகள் இலங்கையில்
வசிக்கும் வெளிநாட்டவர்களின் பிள்ளைகளை இலக்காகக் கொண்டு 1980 ஆம் ஆண்டு காலப்
பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சர்வதேச பாடசாலைகள்
இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள்
அல்லது கிலியி எனப்படும் முதலீட்டு
சபையின் கீழ் செயல்படுகின்றன. இப்பாடசாலைகள்
ஆங்கில மொழி மூலம் கல்வியை
தருவதோடு இரண்டாம் மொழியாக பிரென்ச் மொழியைக்
கற்பிக்கின்றன. ஆரம்பத்தில் தோன்றிய சர்வதேச பாடசாலைகள்
வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டே கல்வியை புகட்டியபோதிலும்
நாளடைவில் உள்நாட்டு ஆசிரியர்களையும் உள்வாங்கின.
பொதுவாகவே
மிகவும் தரமான கல்வியை இத்தகைய
சர்வதேச பாடசாலைகள் வழங்கிய போதிலும் கலாசார
கட்டுக்கோப்புக்கள் மிகவும் தளர்த்தப்பட்ட இப்பாடசாலைகளில்
கற்கும் மாணவர்களின் மனப்போக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி
நடைஉடைபாவனையில் கட்டுப்பாடற்ற கலாசாரத்துக்கு வழிவகுத்தன எனலாம். மாதாந்தமாக ரூபா
20,000 இற்கு மேற்பட்ட தொகை மேற்பட்ட அதி
கூடிய மாதாந்த கட்டணமாக அறவிடும்
இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பெரும்
செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதெனலாம்.
மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
8=னி கூடம், விஞ்ஞான கூடம்
என்பன பொதுவாக எல்லா சர்வதேச
பாடசாலைகளிலும் காணப்படுகின்றன. கொழும்பு சர்வதேச பாடசாலை, ஓவர்kஸ் சர்வதேச பாடசாலை,
விஸர்லி சர்வதேச பாடசாலை என்பவற்றைச்
சொல்லலாம்.
5. சர்வதேச
பாடசாலைகளின் நுழைவால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவால்
ஆங்கிலத்திலேயே முழுதாக கல்வி கற்பிக்க
வேண்டும் என்ற வேட்கை மத்திய
தர பெற்றோர்களையும் பிடித்துக்கொண்டதால், ஆங்கிலம் மூலம் கல்வி கற்பதற்கான
தேவை அதிகமாகியது. ஏற்கனவே இத்தகைய தேவைகளை
பூர்த்தி செய்து வந்தன அலெக்ஸான்றா
கல்லூரி போன்ற சிறிய பாடசாலைகள்
இப்பாடசாலைகளில் தரமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு
பதிலாக பயிற்சியற்ற அனுபவமற்ற ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக இயங்கக்
கூடியவர்களே கல்வி கற்பித்தனர். பதினோராம்
வகுப்பு படித்தால் போதும் மத்திய கிழக்கு
நாடுகளுக்கு போய் தொழில் செய்யலாம்
என்ற குறுகிய இலக்கை மனதில்
கொண்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இத்தகைய
சிறிய கல்விக்கூடங்களுக்கு அனுப்பினர்.
ஆங்கில
மொழி மூலமான கல்விக்கான அதிகரித்து
வரும் கிராக்கியை உணர்ந்த சிலர் சமூக
உணர்வால் உந்தப்பட்டோ அல்லது வியாபார நோக்கத்தோடோ
மேலும் பல மத்திய தர
சர்வதேச பாடசாலைகளை ஆரம்பித்தனர். இவற்றில் சில சீராக நிர்வகிக்கப்பட்டு
தரமான கல்வியை வழங்கி வருகின்றன.
மத்திய தர பெற்றோர்களை இலக்காகக்
கொண்டு இயங்கும் இப்பாடசாலைகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள
போதிலும் இப்பாடசாலைகளின் கல்வி மேற்பார்வை அரசாங்க
கல்வி அமைச்சின் கீழ் வராத காரணத்தால்
எதிர்காலத்துக்குரிய உத்தரவாதம் வெகு குறைவாகவே உள்ளதெனலாம்.
இப்பாடசாலைகள்
தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகள் பதிவு
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதால்
இவற்றின் பொறுப்பிலிருந்து கல்வித் திணைக்களம் விலகியிருப்பதன்
காரணமாக கல்வித் திணைக்களத்திலிருந்து வரக் கூடிய
நன்மைகள் இப்பாடசாலைகளை அடைவதில்லை. இது மாணவர்களைப் பொறுத்தவரை
பெரும் துரதிருஷ்டமாகும். உதாரணமாக ஐந்தாம் வகுப்பு புலமை
பரிசிலை சொல்லலாம். இத்தகைய பாடசாலைகளில் படிக்கும்
மாணவர்கள் அரசாங்க புலமை பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்து தேசிய பாடசாலைகளில் கல்வி
கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். இத்தகைய இரண்டாம் தர
சர்வதேச பாடசாலைகளுக்கு உதாரணமாக கேட்வே சர்வதேச பாடசாலை,
அமல் சர்வதேச பாடசாலை, நிகளஸ்
சர்வதேச பாடசாலை, இல்மா சர்வதேச பாடசாலை
என்பவற்றைச் சொல்லலாம்.
மாணவர்களுக்கான
அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்,
என்பன பொதுவாக எல்லா தேசிய
பாடசாலைகளிலும் காணப்படுகின் றன.
2. மாகாண
பாடசாலைகள் : இந்த பாடசாலைகள் தேசிய
பாட சாலைகளை விட தர
நிர்ணயம் குறைந்தவையாக இருந்தபோதும் இந்த பாடசாலைகளும் மாகாண
அரசாங்கத்தின் கண்காணிப்பில் இயங்கி ஒரு பொறுப்பான
நிர்வாகத்தின் கீழ் அவற்றின் குறைநிறைகள்
சீர் செய்யப்படக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளன. இந்த வகையான பாடசாலைகளில்
சிடபிள்யு. கண்ணங்கரா மகாவித்தியாலம், அல் ஹிதாயா மகா
வித்தியாலயம், டட்லி சேனநாயக்க மகா
வித்தியாலயம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய பாட சாலைகளில்
கற்பிக்கும் ஆசிரியர்களும் பயிற்சிபெற்றவர்களாகவோ பட்ட தாரிகளாகவோ இருப்பதால்
கல்வி தரம் நன்கு பேணப்படுவதற்கான
வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கான அடிப்படை
வசதிகள் இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்,
என் பன அநேகமான மாகாண
பாடசாலை களிலும் காணப்படுகின்றன. வசதிகள்
மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசப் பட்ட
போதும், இடைவேளைகளில் மாணவர்கள் நெருக்கம் இன்றி அசை வதற்கான
அடிப்டை வசதிகள் பொதுவாக எல்லா
பாடசாலைகளிலும் உள்ளன.
3. தனியார்
அல்லது பகுதி தனியார் பாடசாலைகள்
: இவை முற்றிலும் தனிப்பட்ட நிர்வாக அபைம்பின் கீழ்
அரசாங்கத்தின் பகுதி உதவியோடு அல்லது
முற்றிலும் தனியார் முத லீட்டோடு
இயங்குகின்றன. புனித தோமஸ் கல்லூரி,
புனித ஜோஸப் கல்லூரி, ஸஹிரா
கல்லூரி போன்ற பிரபல கல்லூரிகளை
குறிப்பிடலாம். இப்பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து ஒரு குறித்த தொகைகளை
மாதாந்தம் அறவிட்டாலும் மாணவர்களின் எதிர் காலத்துக்கும் பாடசாலைகளின்
எதிர் காலத்துக்கும் நம்பகமான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளதோடு
பொதுவாக தரமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களே
கல்வி கற்பிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் சீராக அமையும் வாய்ப்பு
உள்ளதெனலாம். மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்
என்பன கொதுவாக எல்லா தனியார்
பாடசாலைகளிலும் காணப்படுகின்றன.
4. சர்வதேச
பாடசாலைகள் : சர்வ தேச பாடசாலைகள்
இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பிள் ளைகளை இலக்காகக்
கொண்டு 1980ஆம் ஆண்டு காலப்
பகுதியில் ஆரம் பிக்கப்பட்டன. இந்த
சர்வதேச பாட சாலைகள் இலங்கை
அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள்
அல்லது கிலியி எனப்படும் முதலீட்டு
சபையின் கீழ் செயல்படுகின்றன. இப்
பாடசாலைகள் ஆங்கில மொழி மூலம்
கல்வியை தருவதோடு இரண் டாம் மொழியாக
பிரென்ச் மொழியைக் கற்பிக்கின்றன. ஆரம்பத்தில் தோன்றிய சர்வதேச பாடசாலைகள்
வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டே கல்வியை புகட்டியபோதிலும்
நாளடைவில் உள்நாட்டு ஆசிரியர்களையும் உள்வாங் கின. பொதுவாகவே
மிகவும் தரமான கல்வியை இத்தகைய
சர்வதேச பாட சாலைகள் வழங்கிய
போதிலும் கலாசார கட்டுக்கோப்புக்கள் மிகவும்
தளர்த்தப்பட்ட இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் மனப்போக்கிலும்
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நடை உடைபாவனையில் கட்டுப்பாடற்ற
கலாசாரத்துக்கு வழிவகுத்தன எனலாம். மாதாந்தமாக ரூபா
20,000 இற்கு மேற்பட்ட தொகை மேற்பட்ட அதி
கூடிய மாதாந்த கட்டணமாக அறவிடும்
இத்தகைய பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பெரும்
செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதெனலாம்.
மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், இடைவேளை நேரத்தில் ஓய்வாக
சுற்றித் திரிவதற்கான வசதியான மைதானம், வாசிகசாலை,
கணனி கூடம், விஞ்ஞான கூடம்
என் பன பொதுவாக எல்லா
சர்வதேச பாட சாலைகளிலும் காணப்படுகின்றன.
கொழும்பு சர்வதேச பாடசாலை, ஓவர்
kஸ் சர்வதேச பாடசாலை, விஸர்லி
சர்வதேச பாடசாலை என்பவற்றைச் சொல்லலாம்.
5. சர்வதேச
பாடசாலைகளின் நுழை வால் ஏற்பட்ட
தாக்கத்தின் விளைவால் ஆங்கிலத்திலேயே முழுதாக கல்வி கற்பிக்க
வேண்டும் என்ற வேட்கை மத்திய
தர பெற்றோர்களையும் பிடித் துக்கொண்டதால், ஆங்கிலம்
மூலம் கல்வி கற்பதற்கான தேவை
அதிக மாகியது. ஏற்கனவே இத்தகைய தேவைகளை
பூர்த்தி செய்து வந்தன அலெக்ஸான்றா
கல்லூரி போன்ற சிறிய பாடசாலைகள்
இப்பாடசாலைகளில் தரமான பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு
பதிலாக பயிற்சியற்ற அனுபவமற்ற ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக இயங்கக்
கூடியவர்களே கல்வி கற் பித்தனர்.
பதினோராம் வகுப்பு படித் தால்
போதும் மத்திய கிழக்கு நாடுக
ளுக்கு போய் தொழில் செய்யலாம்
என்ற குறுகிய இலக்கை மனதில்
கொண்ட பெற்றோர்கள் தமது பிள் ளைகளை
இத்தகைய சிறிய கல்விக்கூடங்களுக்கு அனுப்பினர்.
ஆங்கில
மொழி மூலமான கல்விக்கான அதிகரித்து
வரும் கிராக்கியை உணர்ந்த சிலர் சமூக
உணர்வால் உந்தப்பட்டோ அல்லது வியாபார நோக்கத்தோடோ
மேலும் பல மத்திய தர
சர்வதேச பாடசாலை களை ஆரம்பித்தனர்.
இவற்றில் சில சீராக நிர்வகிக்கப்பட்டு
தரமான கல்வியை வழங்கி வருகின்றன.
மத்திய தர பெற்றோர்களை இலக்
காகக் கொண்டு இயங்கும் இப்
பாடசாலைகள் நல்ல முன்னேற்றத் தைக்
கண்டுள்ள போதிலும் இப் பாடசாலைகளின் கல்வி
மேற்பார்வை அரசாங்க கல்வி அமைச்சின்
கீழ் வராத காரணத்தால் எதிர்காலத்துக்
குரிய உத்தரவாதம் வெகு குறை வாகவே
உள்ளதெனலாம். இப்பாட சாலைகள் தனியார்
நிறுவனங்கள் மற்றும் கடைகள் பதிவு
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதால்
இவற் றின் பொறுப்பிலிருந்து கல்வித்
திணைக்களம் விலகியிருப்பதன் கார ணமாக கல்வித்
திணைக்களத்தி லிருந்து வரக் கூடிய நன்மைகள்
இப் பாடசாலைகளை அடைவதில்லை. இது மாணவர்களைப் பொறுத்தவரை
பெரும் துரதிருஷ்டமாகும். உதாரண மாக ஐந்தாம்
வகுப்பு புலமை பரிசிலை சொல்லலாம்.
இத்தகைய பாடசாலைகளில் படிக்கும் மாணவர் கள் அரசாங்க
புலமை பரிசில் பரீ ட்சையில்
சித்தியடைந்து தேசிய பாடசாலைகளில் கல்வி
கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். இத்தகைய இரண்டாம் தர
சர்வதேச பாடசாலை களுக்கு உதாரணமாக
கேட்வே சர்வதேச பாடசாலை, அமல்
சர்வதேச பாடசாலை, நிகளஸ் சர்வதேச பாட
சாலை, இல்மா சர்வதேச பாடசாலை
என்பவற்றைச் சொல்லலாம்.
ConversionConversion EmoticonEmoticon