பாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை


பாம்புகளில் சில பாம்புகள் மட்டுமே நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும். உயிருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலேயே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்றப் பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக்கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும் கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக்கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடைகாக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வர்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன. பாம்புகளுக்குக் காதுகள் கிடையாது.

பாம்பின் கால் பாம்பறியும். கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான்மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறதுஎன்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னாடி நகர்கிறது. மண்புழுவுக்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால் பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது. பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்ட கம்பிகள் போல் இருக்கும். பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்.
Previous
Next Post »

More News