பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டு குற்றவியல் பிரேரணையில் குற்றவாளியாகியுள்ள பிரதம நீதியரசர் சிராணி
பண்டாரநாயக்கா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும்
(14) திங்கட்கிழமை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து
பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக அரசியல்
வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. அதற்கேற்ப, புதியதொரு பிரதம நீதியரசர் எதிர்வரும்
செவ்வாய்க் கிழமை (15) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான பெரும்
சாத்தியக்கூறு உள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு
முன்னாள் நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் நியமிக்கப்படலாம்
எனவும் அறியக்கிடக்கிறது. அதற்கேற்ப, மொஹான் பீரிஸின் பெயர்
நாளை (13) ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் சபைக்கு பிரேரித்து அனுப்பவுள்ளதாகவும்
குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதியினால்
அனுப்பப்படும் பெயரை சட்டவாக்க சபை
ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததும் புதிய நீதியரசர் ஜனாதிபதி
முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொள்வார்.
(கலைமகன்
பைரூஸ்)
ConversionConversion EmoticonEmoticon