மழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்பட்டுள்ளது


கிழக்கியையும் மேற்கையும் இணைக்கும் ஒரு போக்குவரத்து பாதையாக அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் பிரதான பாதையான மன்னம்பிட்டி ஊடான மட்டக்களப்பு-கொழும்பு போக்குவரத்து நேற்று (10.1.2013) மாலை தொடக்கம் வெள்ளம் காரணமாக தடைப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையினால் குளங்கள் நிரம்பியதையடுத்து குளங்களின் வான் கதவுகள் நேற்று திறந்து விடப்பட்டன.

இதனால் மன்னம்பிட்டி மற்றும் கல்லள போன்ற பிரதான வீதிகளில் ஐந்து, ஆறு அடிகளுக்கு மேல் வெள்ளம் பாய்வதால் மன்னப்பிட்டி ஊடான மட்டக்களப்பு-கொழும்பு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதே போன்று மகாயோ ஊடான மட்டக்களப்பு பதுளைக்குமிடையிலான போக்குவரத்தும் நேற்று மாலை தொடக்கம் தடைப்பட்டுள்ளது. மகோயா 69ம் கட்டையின் பிரதான வீதியில் ஆறு அடி அளவில் வெள்ளநீர் பாய்வதால் இவ் வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

Previous
Next Post »

More News