விஜய்யுடன்
சேர்ந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு எனது மகன்
விஜய்யை மடியில் கிடத்தி கொஞ்சி
மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜோஸ் அலுக்காஸ்
நிறுவனத்திற்கு என் நன்றிகள் என
விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்
தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி
நடிகராக இருக்கும் விஜய், தனது படவேலைகளுக்கு
மத்தியில் பல்வேறு விளம்பரப் படங்களில்
நடித்துள்ளார். தமிழில் ஜோஸ் அலுக்காஸ்
நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
இந்நிலையில்
விஜய்யும், அவரது அம்மாவும் பாடகியுமான
ஷோபா சந்திரசேகர் இருவரும் முதன் முறையாக ஜோஸ்
அலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் தோன்றி
நடித்துள்ளனர். விஜய், தனது அம்மா
ஷோபா சந்திரசேகரின் மடியில் படுத்தபடி பாசத்தை
பொழிவது போன்றும், ஷோபாவும் விஜய் மீது பாசத்தை
பொழிவது போன்றும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொம்ப தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் மக்களிடம்
வெகு சீக்கிரத்தில் ரீச்சாகி உள்ளது. காரணம் அம்மா-
மகன் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தை
அப்படியே ரியலாக எடுத்துள்ளனர். டென்ஸ்
ஏஜென்ஸி மைண்ட் ஷேர் இன்டர்நேஷனல்
நிறுவனம் இந்த விளம்பரத்தை உலகம்
முழுக்க ரிலீஸ் செய்கிறது. தமிழ்,
தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று
மொழிகளிலும் இந்த விளம்பரம் வெளியாகிறது.
இந்த விளம்பரத்தில் நடித்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறார்
ஷோபா. இது குறித்து அவர்
மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சின்ன
வயதில் எனது மகனை (விஜய்)
மடியில் கிடத்தி கொஞ்சி மகிழ்ந்தது
உண்டு. இபபோது பெரிய ஸ்டாராகிவிட்டதால்
நிற்க கூட நேரமின்றி ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங்
என்று ஒடிக்கொண்டு இருக்கிறார்.
அப்படி
இருக்கையில் பல வருடங்களுக்கு பிறகு
மீண்டும் எனது மகனை எனது
மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும்
வாய்ப்பு கிடைத்தது. 2 நாளும் எனது மகனுடன்
சேர்ந்து நடித்து, அவனுடன் கொஞ்சி மகிழ்ந்தது.
மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
கொடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்திற்கு
எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.
மேலும்
இந்தக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார் ஷோபா.
ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங் என்று விஜய்
பிஸியாக இருந்ததால் அவருடன் அதிக நேரம்
செலவிட முடியவில்லையாம் ஷோபாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு
அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததால்
உணர்ச்சிவசப்பட்டு அழுததாக ஷோபா கூறியுள்ளார்.
ConversionConversion EmoticonEmoticon