இலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு!


இலக்கியத்திற்கான இந்த ஆண்டுக்கான நோபல் விருதுக்கு சீன எழுத்தாளர் மொ யன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் அகடாமியின்  தலைமையகமான ஸ்டோக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.


நாட்டுப்புற கதைகள், வரலாறு மற்றும் சமகாலத்தை ஒன்றிணைந்ததாக அவரது எழுத்துப் பாணி அமைந்திருப்பதாக நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சீனாவின் முன்னணி எழுத்தாளராக உள்ள மொ யன், 20 ஆம் நூற்றாண்டின் சீன சமூகம் இருண்ட மற்றும் அறுவறுக்கத்தக்கது என விமர்சித்தவராவார்.

57 வயதான அவரது உண்மையான பெயர் குவன் மோயே ஆகும். ஆனால் மொ யன் என்ற புனைப்பெயரில் எழுதிவருக்கிறார்.

இவர் சீன மொழியில் எழுதிய பல நாவல்கள் பின்பு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1987 ஆம் ஆண்டு இவர் எழுதியரெட் சொர்கும்என்ற நாவல் வெளிநாடுகளில் பிரபலம் அடைந்தது. இந்த நாவலில் கிழக்கு சீன கிராமப்பகுதியில் இடம்பெற்ற கொடூரங்களை வர்ணித்துள்ளார்.

 இதன்படி இலக்கியத்திற்கான நோபல் விருது வென்ற முதல் சீன பிரஜையாகவும் சீனாவில் பிறந்த இரண்டாமவர் ஆகவும் மொ யன் பதிவானார்.

இதற்கு முன்னர் சீனாவில் பிறந்த கவு எக்சிஜியான் 1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் பிரஜா உரிமையைப் பெற்ற நிலையில் 2000 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருதை வென்றார்.
Previous
Next Post »

More News