இலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து!


 இலங்கையில் நாளுக்கு நாள் விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. அதிகமானவை சாரதிகளின் கவனக்குறை என்பதை யாரும் மறுக்க முடியாது.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு புள்ளியிடும் முறைமை இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மற்றும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகும் சாரதிகளுக்கு புள்ளியிடப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எச்.எஸ் ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

இதற்கமைய தவறொன்றுக்கு 12 புள்ளிகள் வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டது.
ஒருவருக்கு 24 புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில் அவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒருவருடகாலம் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் மேலும் கூறினார்.-சக்தி நியூஸ்
Previous
Next Post »

More News