ஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”


இனிமேல் நீங்கள் பயணம் போகும் போது ஐநூறு புத்தகங்களை உங்கள் சட்டைப் பையில் செருகிக் கொள்ளலாம் என்றோ, நூலின் எழுத்துருவை உங்களுக்குப் பிடித்த அளவுக்கு பெரிதாக்கி வாசிக்கலாம் என்றோ சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்பித் தான் ஆகவேண்டும். 'சோனி ரீடர்' என்றொரு புதிய கருவி வந்திருக்கிறது.

ஒரு சிறு புத்தகத் தின் அளவே உள்ள இது ஒரு மின்னணுப் புத்தகம். சந்தையில் பிரபலமாகி வரும் மின் நூல்களை இந்த மின்னணுப் புத்தகத்தில் சேமித்து வைத்தால் போதும். எப் போது வேண்டுமெனிலும் வாசிக் கலாம்.

நூற்றுக்கணக்கான நாவல்களையும், கவிதை நூல்களையும், கட்டுரை நூல்களையும் இதனுள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிடித்தமான அளவுக்கு எழுத்துருவைப் பெரிதாக்கிக் கொள்ளலாம். எத்தனை பக்கம் படித்தேன் என ஒவ்வொரு முறையும் குழம்பவும் தேவையில்லை.

 ஒவ்வொரு முறை இதைத் திறக்கும் போதும் கடந்த முறை எத்தனை பக்கங்கள் படித்தீர்கள் என்பதை நினைவில் வைத்திருந்து சரியாக அதே பக்கத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.

கணனியில் இந்த வசதிகள் எல் லாம் உண்டு. ஆனால் கணனியை நீங்கள் எங்கும் கொண்டு சென்று வாசிக்க வசதிப்படாது. செல்லு மிடமெல்லாம் தூக்கிச் செல்லவும் முடியாது. ஆனால் இந்தக் கருவி அப்படியல்ல. புத்தகம் கிழிந்து போகும் என்ற கவலையும் இந்தக் கருவியில் இல்லை.

 எப்போது வேண்டுமானாலும் புது நூல்களை நுழைக்கவும் செய்யலாம், பழைய நூல்கள் படித்த பின் அல்லது வேண்டாமென தோன்றும் கண த்தில் அழித்துவிடவும் செய்யலாம். இந்த புதிய மின்னணு நூல் பிரபலமாகும் என்றும் இது புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிர சாதம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இனி வரும் காலங்களில் மின் நூல்கள் அதிகம் விற்பனையாகவும், காகித பயன்பாடு குறைந்து காடுகள் காப்பாற்றப்படவும் இத்தகைய கருவிகள் மிகவும் துணை செய்யும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous
Next Post »

More News