சர்வதேச மனித உரிமை தினம் Dec. 10


மனித உரிமை என்பது ஒவ்வொருவரும் மனிதராக இருப்பதன் காரணத்தினால் உரிமைகளைப் பெறவேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும் ஒன்றாகும்.

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் உயிர் வாழும் காலம் வரைக்கும் அவனுக்கான உரிமைகள் கூடவே இருக்கின்றது. உரிமைகளை அரசாங்கம் மதித்து, பாதுகாத்து, நிறைவேற்றுதல் வேண்டும.; ஆனால் ஒருவர் உரிமையினை அனுபவிக்கும் போது அடுத்தவர்களைப் பாதிக்காது இருக்க வேண்டியது அவசியமாகும்.


இவ் ஆண்டின் மனித உரிமைகள் தின கருப்பொருளாக My Voice Counts ‘ ‘எனது குரல் கணக்கில் எடுக்கப்படுகிறதுஎன .நா.சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இது மனிதனது உள்ளார்ந்த கௌரவத்தையும், சமத்துவத்தையும், மற்றும் பராதீனப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்து பாதுகாத்தலாகும். உலகில்  வாழுகின்ற போது சுதந்திரம், நீதி என்பவற்றிற்கு உரிமைகள் அடிப்படையாகவுள்ளது.

மனித உரிமைகள் வரலாற்றினை எடுத்து நோக்கும்போது, உரிமைகளைப் பாதுகாக்க எழுத்திலான ஆவணம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிரான்சிஸ் ருஸ் வெல்டின் மனைவி எலினோர் தலைமையில் ஐக்கிய நாடுகள் தாபனம் எட்டு அங்கத்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை தெரிவு செய்தது. இக்குழுவின் ஆலோசனைப்படி எழுதப்பட்ட ஆவணம் .நா. பொதுச் சபையினால் 10.12.1948 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனையே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் என்கிறோம். இந்நிகழ்வின் காரணமாகவே டிசம்பர்; பத்தாந் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐக்கிய நாடுகள் தாபனம் பிரகடனம் செய்துள்ளது.

மனித உரிமைகள் பிரகடனம் உலகின் சகல நாடுகளிலும் மனித உரிமையின் நிலையினைக் கணிப்பீடு செய்யும் அளவுகோளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 30 உறுப்புரைகளைக் கொண்ட இந்தப் பிரகடனத்தின் முதலாவது வாசகம் மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமையிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயாத்தையும், மனட்சாட்சியையும் இயற்கையாகவே பெற்றவர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும் எனக் கூறப்பட்டு;ள்ளது.

இந்த ஆவணத்தில் கைச்சாத்திடும் அரசுகள் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் கேள்விகளுக்கு பொறுப்புடன் விடையளிக்க வேண்டிய கடற்பாடு இருக்கின்றது.

மனித உரிமைகள் பிரகடனத்தின் பின்னர் சிவில், அரசியல் உரிமைகள் என்றும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடம்பாட்டு ஒப்பந்தங்கள் எனவும் இரு விடயங்கள் கொண்டு வரப்பட்டன.

இது 1966 டிசம்பர் 16ந் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றபட்டு; உறுப்பு நாடுகளிலிருந்து அங்கீகாரம் கிடைக்கப்பெற்றமையினால் 1976ம் ஆண்டு; நடைமுறைக்கு வந்நது.

சிவில் மற்றும் அரசியல் உரிமை சம்பந்தமான சர்வதேச பொருந்தனை

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் இரண்டாவது ஆவணமாக சிவில் மற்றும் அரசியல் உரிமை சம்பந்தமான சர்வதேச பொருந்தனை இருக்கின்றது. உரிமைகள் சம்பந்தமாக அங்கத்துவ நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. சிவில், மற்றும் அரசியல் உரிமைகள்  என்ற பொருந்தனையின்படி, உயிர்வாழ்வதற்கும், தனிநபர் சுதந்திரத்திற்கும், பாதுகாப்புக்கும், கொடுரமான இழிவான, மனிதாபிமானமற்ற நடத்துகைக்கும்  மற்றும் ஏனைய சுதந்திரங்கள் பற்றி  ஒருவருக்குள்ள உரிமைகள் பற்றியும் இப் பொருந்தனை  விபரிக்கிறது.

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்

இப்பொருந்தனை மூலம் போதிய வாழ்க்கைத் தரத்தினை ஈட்டிக் கொள்வதற்காகவும், சுதந்திரமாக தொழிலைத்  தெரிவு செய்வதன்மூலம், நியாயமான ஊதியத்தைப் பெற்றுக் கொள்வது, சங்கங்கள் அமைத்து செயற்படுவது மற்றும் சமூகப் பாதுகாப்பை பெற்றுக் கொள்வது என்பதுடன் கல்வி, சுகாதாரத்திற்கான உரிமை பற்றியும் கூறப்பட்டு;ள்ளது.

இப்பொருந்தனைகளை அங்கீகரித்துள்ள அரசுகள் .நா. மனித உரிமைகள் குழுவிற்கு வருடாந்த முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்பதோடு குறித்த அறிக்கைகளை அக் குழு மீளாய்வு செய்யும.;

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தமான சர்வதேச பொருந்தனையின் உப உடன்படிக்கையான விருப்புத் தெரிவு மரபு விதி யின்படி, பொருந்தனையில் குறிப்பிட்டு;ள்ள ஏதாவது உரிமை மீறப்பட்டால் உள்நாட்டு நீதி வழங்கும் நிறுவனங்களில் பரிகாரம் கிடைக்காதவிடத்து, .நாடுகள் மனித உரிமைகள் குழு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கின்றது. இதனை அரசுகள் ஏற்றுக் கொள்வது ஓர் விருப்புத் தெரிவாகும்.

சுதந்திரமான அரசின் கடப்பாடு

அரசுகள் தமது எல்லைக்குள் முழு அரசியல் அதிகாரத்தைக் கொண்டதாகும். ஒரு உடன்படிக்கையில் கையெழுத்து வைத்த பின்னர் அதில் உள்ள விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசிற்கு உள்ளது. அத்துடன் உரிய உடன்படிக்கை மூலம் நிறுவப்பட்டுள்ள கண்காணிக்கும் அமைப்புக்களுக்கு வருடாந்த அறிக்கைகளை அனுப்பி வைக்கவும் வேண்டும். இந்த அறிக்கைகள் பகிரங்கமாக விபரிக்கப்படும். ஒரு நாட்டில் நிலவும் மனித உரிமைகள் பற்றிய அறிக்கையினை வழங்குவதில் நாடுகளுக்கிடையே காலதாமதம் ஏற்படும்.

மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டினுள் தொடர்ச்சியாக இடம்பெறுமாயின் அது பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு அமர்வொன்றினை நடாத்தி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும். இத்தீர்மானத்திற்கு மத்தியில் பொருளாதாரத் தடைகளை விதித்தல், உதவிகளை நிறுத்துதல்மற்றும் சமாதானப் படைகளை அனுப்பி வைத்தல்  போன்றவற்;றை ஐக்கிய நாடுகள் தாபனம் செய்யலாம்.
Previous
Next Post »

More News