அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவம்



 கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்பது போல் அமெரிக்காவில் ஆயுதங்களின் அட்டகாசம் அந்த அரசாங்கத்திற்கு பெரும் தலையிடுயை உருவாக்கியுள்ளன.

அமெரிக்க, கனெக்டிகட் மாகாணம் நியூடவுன் பகுதியில் உள்ள சான்டி ஹூக் தொடக்கப்பள்ளியில், ஆடம் லான்சா என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாயினர். பின்னர் அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட பல நாடுகள் தங்களது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுக்கும் வகையில், கடும் கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கி சட்டத்தைத் திருத்தி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு அனுப்பப்பட்ட இதில் 43,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் துப்பாக்கிச் சட்டத்தை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Previous
Next Post »

More News