உங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்


ஆங்கிலம் இன்று உலகின் பட்டி தொட்டியெல்லாம் வியாபித்து விட்டன. எதை எடுத்தாலும் ஆங்கில சொற்களே முன்னுருமையளிக்கப்படுகின்றது. எமது இலங்கையிலும், ஏன் எமது பகுதியிலும் ஆங்கிலம் தெரிந்தால் அவர்களுக்கு ஒரு தனி மரியாதை,
ஆனால் அந்த ஆங்கில மொழியை சரியாக பேசும் போது தான் அதற்கான அந்தஷ்து கிடைக்கும் அதற்காக எங்களை நாங்கள் பல வழிகளில் திருத்திக் கொள்ள ஒரு இணைய தளம் உதவுகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மேலும் எமது ஆங்கில அறிவை பட்டை தீட்டிக்கொள்ள ஒரு வழி வேண்டும்;ஆனால் அந்த வழி சுலபமானதாவும் இருக்க வேண்டும்,சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ஆர்டில்குலேட் இணையதளம் நிச்சயம் உங்களை கவரக்கூடும்.

இந்த மொழியில் புதிய வார்த்தைகளை தெரிந்து கொண்டு ஆங்கில சொல் வங்கிய வளமாக்கி கொள்ள உதவுகிறது.சொல் வங்கி என்றவுடன் தினந்தோறும் பல வார்த்தைகளை அறிமுகம் செய்து கொண்டு அவற்றின் பொருளை மனதி நிறுத்தி கொள்ள வேண்டுமோ என்று மிரண்டு போக வேண்டாம்.

ஒவ்வொரு படியாக முன்னேறுவது என்று சொல்வார்களே அதே போல இந்த தளம் ஒவ்வொரு சொல்லாக ஆங்கில சொல் வங்கியை வளமாக்கி கொள்ள வழி காட்டுகிறது.அதிலும் இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தில் பலருக்கும் பரிட்சயமான ,விருப்பமான டிவிட்டர் சேவையோடு கலந்து புதிய ஆங்கில சொல்லை கற்க கைகொடுக்கிறது.

ஆங்கில சொல் வளத்தை பெருக்கி கொள்ள விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்.

இந்த தளத்தில் தினந்தோறும் இடம்பெறும் புதிய ஆங்கில சொல் அறிமுக செய்யப்படுகிறது. அந்த சொல்லுக்கான பொருளும் கொடுக்கப்பட்டிருக்கும்.அந்த சொல்லின் அர்த்தத்தை தெரிந்து கொண்ட பின் அதனை பயன்படுத்தி டிவிட்டரில் ஒரு குறும்பதிவு வெளியிட வேண்டும்.

மற்ற உறுப்பினர்களும் அந்த சொல்லை பயன்படுத்தி குறும் பதிவை வெளியிட்டிருப்பார்கள்.அவர்களோடு உங்கள் குறும்பதிவு போட்டியிடும். அதாவது நீங்கள் குறும்பதிவில் அந்த சொல்லை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் சக உறுப்பினர்கள் அதனைலைக்செய்திருப்பார்கள் அல்லது மறுடிவீட் செய்திருப்பார்கள் .

அதிக லைக் அல்லது மறுடிவீட் பெறும் பதிவுகள் முகப்பு பக்கத்தில் வரிசையாக இடம் பெறும்.
தினமும் புதிய சொல் ஒன்றை தெரிந்து கொள்வதோடு அதனை பயன்படுத்தவும் வைத்து அந்த சொல்லை மனதில் பதிய வைப்பதோடு தொடர்ந்து பயன்படுத்த ஊக்கம் தரும் வகையில் மற்றவர்களோடு போட்டியிட வைக்கிறது.

டிவிட்டர் பிரியர்களுக்கு இந்த சேவை சவாலான இன்பத்தை அளிக்க கூடும்.

சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட சொல்லை பயன்படுத்தியிருக்கும் விதத்தை பார்க்கும் போது அதனை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முதல் முறையாக இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் இதற்கு முன்னர் இந்த தளத்தில் இடம் பெற்ற சொற்களையும் அவை குறும்பதிவுகளாக பயன்பட்ட விதத்தையும் பார்க்க முடியும். வெற்றி பெற்றவர்கள்,மற்றும் முன்னிலை பெற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க முடியும்.

நாளடைவில் ஆங்கில மொழி புலமையை வளர்த்து கொள்ள இந்த தளம் உதவும். மொழி கற்க உதவும் இணையதளங்களில் மிகவும் சுவாரஸ்யமான தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். கற்பதன் சுமை தெரியாமல் பயனாளிகள் மத்தியில் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த சேவையின் சிறப்பு என்று சொல்லலாம்.

அதற்கேற்ப இதன் வடிவமைப்பும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

 இந்த தளத்துடன் இணைந்த கொள்ள  www.artwiculate.com
Previous
Next Post »

More News