சுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி


சிறானி பண்டாரநாயக்கவுக்கு  எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

செவ்வாக்கிழமை கொழும்பு – 07 விஜயராமவில் இலங்கை பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவனத்தின் புதிய பல்மாடி கட்டடத் தொகுதியை திறந்துவைத்து அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்கே சுயாதீன குழு நியமிக்கப்படவுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த சுயாதீன குழுவை நியமிக்கவுள்ளேன். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் எனது மனசாட்சிக்கு மட்டுமே நான் பதிலளிக்க வேண்டும். அது சரியானதாகவும் இருக்கவேண்டும்.

நான் இந்த நடவடிக்கையை எனது தேவைக்காகவே எடுக்கின்றேன்.இவ்வாறு செய்யவேண்டும் என்று புத்தகங்களிலோ அல்லது சட்டத்திலோ இல்லை என்றார்.
Previous
Next Post »

More News