ஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது



சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது தகுதிச் சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாம்பஷயர் அணியை வீழ்த்தி பிரதான சுற்றில் விளையாட தகுதிபெற்றது ஆக்லாந்து ஏசஸ்.

தகுதிசுற்றின் முலம் பிரதான சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி ஆக்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவின் செஞ்சுரியனில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆக்லாந்து களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய செய்த ஹாம்ப்ஷயர் அணியில் கோபெரி அதிகபட்சமாக 65 ஓட்டங்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறியதால் அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆக்லாந்து தரப்பில் அசார் மெகமூத் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஆக்லாந்து வெற்றி

இதையடுத்து துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான வின்செட் 19 ஓட்டங்களில் வெளியேற மார்ட்டின் குப்டிலுடன் இணைந்தார் அசார் மஃமூத். அந்த அணி 90 ஓட்டங்கள் எட்டிய போது குப்டில் 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கிட்சேன் களம்புகுந்தார்.

 மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அசார் மஃமூத் 29 பந்துகளில் அரைச்சதம் கண்டார். இறுதியில் அந்த அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களை எடுத்து வெற்றிகண்டது.

அசார் மஃமூத் 31 பந்துகளில் 4 சிக்சர், 5 பெளண்டரிகளுடன் 55, கிட்சென் 6 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அசார் மஃமூத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றில் ஆக்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Previous
Next Post »

More News