இந்த வங்கி
ஒன்று அமைப்பது தொடர்பான அவசியம் சுகாதார
திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தாய்ப்பாலில் தரத்திற்கு
எந்தப்பாலும் இருக்க முடியாது ஒரு குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் முக்கியமாகும்.
அந்தக் குழந்தை எதிர்காலத்தில் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளை உடலில் வளர்த்துக்கொள்வதற்கும்,
நீண்ட ஆயுளோடு வளர்வதற்கும் இது அவசியமாகும்.
இலங்கையில் தொழில்
புரியும் தாய்மாருக்கு தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால்
ஊட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்
நோக்குகின்றனர். எனவே தான் இலங்கையிலும்
தாய்ப்பால் வங்கி ஒன்றை அமைப்பது
குறித்து சுகாதார கல்விப்பணியகத்தின் கவனம்
திரும்பியுள்ளதாக தேசிய போஷாக்கு தொடர்பான
இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரசேன
தெரிவித்தார்.
இது தொடர்பாக,
உலக தாய்ப்பால் ஊட்டல் தொடர்பான ஆய்வின்
2012ஆம் ஆண்டுக்கான இலங்கை அறிக்கை வெளியிடும்
வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தின் போதே
அது தொடர்பான தகவலை தெரிவித்தார். குழந்தை
பிறந்து மூன்று அல்து
4 மாதங்களில் தமது பிரசவ கால
விடுமுறை முடிந்த பின்னர் தாய்மார்
தொழிலுக்குச் செல்ல நேரிடுகின்றது. இத்தகைய
தாய்மார் தமது குழந்தைக்கு பால்மாவை
வழங்குகின்றனர். இதனால் குழந்தையின் போஷாக்கிற்கு
பங்கம் ஏற்படுகின்றது. குறைந்த பட்சம் தாய்மார்
ஆறு மாத காலத்துக்காவது தமது
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என
வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தகைய
தாய்மாரின் குழந்தைகளுக்கு தாய்ப்பால்வங்கியூடாக தாய்ப்பாலைக்
கொடுக்க முடியும் என தேசிய போஷாக்கு
தொடர்பான இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரசேன தெரிவிக்கிறார்.
எடை குறைந்த குழந்தைகளுக்கு அவர்களது
போஷாக்கு நிலையை அதிகரித்துக்கொள்வதற்கு உத்தேச தாய்ப்பால்
வங்கி வரப்பிசாதமாகும் எனவும், பிலிப்பைன் போன்ற
நாடுகளில் இத்தகைய வங்கிகள் நல்ல
பலனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
குறைந்த
செலவில் இலங்கையில் தாய்ப்பால் வங்கிகளை அமைக்க முடியுமெனவும் தேசிய
போஷாக்கு தொடர்பான இணைப்பாளர் டாக்டர் லலித் சந்திரசேன
நம்பிக்கை தெரிவிக்கிறார்.
ConversionConversion EmoticonEmoticon