தத்துவஞானி அரிஸ்டோட்டில்



சீரிஸ்டோட்டில் அல்லது அரிஸ்டாட்டில் (கி.மு. 384 மார்ச் 7 - கி.மு. 322) கிரேக்கத் தத்துவ ஞானியாவார். பிளேட்டோவும் இவரும் மேலைத்தேசச் சிந்தனையில் மிக அதிக செல்வாக்கு செலுத்தும் தத்துவ ஞானிகளாக கருதப்படுகிறார்கள்.

இவ்விருவருடன் சோக்கிரட்டீசும் சேர்ந்து முப்பெரும் கிரேக்கத்தத்துவ ஞானிகளாக திகழ்கின்றனர். பிளேட்டோவே அரிஸ்டோட்டலின் குரு. சோக்கிரட்டீசின் (கி.மு. 470 - 399) சிந்தனைகள் மற்றைய இருவரின் சிந்தனை மீதும் ஆழமான தாக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மாவீரன் அலெக்சாண்டர் இவ்விருவருடைய சீடர் ஆவார்.
Previous
Next Post »

More News