சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்


சவுதியில் இஸ்லாமிய சட்டப்படி கற்பழிப்பு, கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றுவது சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ளநிலையில் இங்கு தங்கி நின்று வேலைபார்த்த சூடான் நாட்டை சேர்ந்த ஓத்மேன் முகமது என்பவரை அவருடன் தங்கி வேலை செய்த சக நாட்டுக்காரரான சாலா அகமது என்பவருக்கும் இடையில் நிலவிய பிரச்சினையில் தலையிலேயே அடித்து கொன்றதற்கு நீதிமன்றத்தில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்காக மெக்கா நகரின் மேற்கு பகுதியில் ஒரு பொது இடத்தில் வைத்து முகமதுவின் தலையை வெட்டி அரசு சிறச்சேதம் செய்துள்ளது. இதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

கடந்த வருடம் மட்டும் 89 சிறச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை கூறியுள்ளது.

Previous
Next Post »

More News