பந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?


இந்த எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்ப வேண்டும். அவற்றில் மை ஒழுகவும் செய்யும். சீனாவில் கண்டுபிடித்த இண்டியன் இங்க் என்னும் மை உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

தோல் பதனிடுபவரான ஜான்.ஜே. லூயிட் என்பவரால் 30-10-1888 இல் பதிவு செய்த எழுதுகோளுக்கான காப்புரிமையின் போது இத்தகைய பிரச்சினைகள் இருப்பது முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்டது. நிப் (Nib) புக்கு பதிலாக சுழலும் ஒரு சிறிய பந்து கொண்ட எழுதுகோலை அவர் உருவாக்கினார். ஒரு மை தேக்கத்தில் இருந்து இதற்கான மை வந்து கொண்டே இருக்கும். அப்போதும் கூட அந்த எழுதுகோலிலும் மை கசிந்து கொண்டுதான் இருந்தது. என்றாலும் தோலின் மீது எழுதுவதற்கு மற்ற மை எழுதுகோல்களை விட இந்த பந்துமுனை எழுதுகோல் மிகவும் ஏற்றதாக இருந்தது. லூயிட் இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறத் தவறிவிட்டார்.

மேலும், லாஸ்லோ பிரோ (1899-1985) என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் முதலில் ஒரு மருத்துவராகத்தான் பயிற்சி பெற்றார். ஆனால் அவர் மருத்துவக் கல்வியை முடித்துப் பட்டம் பெறவேயில்லை. பத்திரிகைத் துறைக்கு வரும் முன் சில காலம் அவர் ஹிப்னாடிசம் செய்பவராகவும், பந்தயக் காரோட்டியாகவும் பணியாற்றி வந்தார்.

பத்திரிகை அச்சடிக்கும் மை விரைவில் உலர்ந்து விடும்போது, தனது எழுதுகோலில் உள்ள மை உலவர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சிறு பால்பேரிங் முனையில் வைத்து அவர்கள் தயாரித்த எழுதுகோலில் அந்த முனை திரும்பும்போது மை இழுக்கப்படுவதன் மூலம் பிரோவும் வேதியலாளரான அவரது சகோதரர் கியார்கியும் தங்களது கண்டுபிடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றனர். பிரோ என்னும் பந்துமுனைப் பேனா உருவெடுத்தது.

1938 இல் இந்த பேனாவுக்கான உரிமையை இந்த சகோதரர்கள் ஹங்கேரியில் பதிவு செய்தனர். 1940 இல் நாஜிகளுக்கு அஞ்சி அர்ஜன்டைனாவுக்கு அவர்கள் குடியேறி அங்கு தங்களின் பந்துமுனை பேனாவுக்கு 1943 இல் மறுபடியும் காப்புரிமை பதிவு செய்து கொண்டனர். அவர்களது முதல் வாடிக்கையாளர் இங்கிலாந்து நாட்டின் ராயல் விமானப்படைத் துறையாக அமைந்தது. அதிக உயரத்தில் அந்த பந்துமுனைப் பேனா நன்றாக எழுதுவது அர்களுக்கு ஊக்கமளித்தது. இதனால் இங்கிலாந்தில் பந்து முனைப் பேனாவுக்கு பிரோ என்ற பெயர் அடையாளமாக ஆகிவிட்டது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பிரோ பந்து முனைப் பேனாக்கள் 1945 இல் தயாரிக்கப்பட்டன. அதே நேரத்தில் பிரோ தனது பேனாவைத் தயாரிப்பதற்கு மார்சல் பிச் என்ற பிரஞ்சுக்காரருக்கு பிரோ உரிமம் அளித்தார்.

தனது நிறுவனத்தை பி.அய்.சி. என்று அழைத்த பிச் பிரோவின் பேனா வடிவை மாற்றியமைத்தார். இதனால் அதிக அளவில் அதனைத் தயாரிக்கவும் முடிந்தது; குறைந்த விலைக்கு விற்கவும் முடிந்தது. பி.அய்.சி. நிறுவனமே உலகின் பந்துமுனைப் பேனா விற்பனை சந்தையின் தலைவராக விளங்கியது. அதன் ஆண்டு விற்பனை 138 கோடி யூரோ டாலர்களாக இருந்தது. 2005 இல் 1000 ஆவது கோடிப் பேனாவை அவர்கள் விற்பனை செய்தனர். பிரோவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அர்ஜன்டைனா நாட்டினர் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 29 அன்று கண்டுபிடிப்பாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

கரும்பலகையில் எழுதுவதற்கு நாம் எதனைப் பயன்படுத்துகிறோம்?

கரும்பலகையில் எழுதுவதற்கு சுண்ணாம்புக் குச்சி எனும் எழுதுகோலை நாம் பயன்படுத்து கிறோம். பள்ளிகளில் கரும்பலகையில் எழுதப் பயன்படுத்துபவை உண்மையில் ஜிப்சம் எழுது கோலல்ல. அவை சுண்ணாம்பு, பவளம், சலவைக் கல், மனிதர்கள் மீன்களின் எலும்புகள், கண்களின் ஆடி, போன்றவைகளைப் போன்று கால்சியம் கார்பனேட்டினால் ஆனது.

ஆனால் ஜிப்சம் கால்சியம் சல்பேட்டால் செய்யப்படுவது. இது ஒரு சாதாரண வேறுபாடு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்று போலவே தோன்றினாலும், உண்மையில் அவை ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவையாகும். ஒரே வேதியியல் தனிமங்களால் செய்யப்பட்டவையும் அல்ல.


மிகவும் மாறுபட்டவைகளாகத் தோன்றும் பல பொருள்கள் உண்மையில் ஒரே மாதிரியான வேதியியல் தனிமங்களால் செய்யப்பட்டவையாக உள்ளன. கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். டெஸ்டோஸ் டெரோன், வனில்லா, ஆஸ்பிரின், கொலஸ்டிரால், க்ளூகோஸ், வெனிகர் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பல்வேறுபட்ட அளவுகளில் கலந்து செய்யப்பட்டவை இவை.

நீர்கலக்கப்பட்ட கால்சியம் சல்பேட் என்ற தொழில் நுட்பப் பெயர் கொண்ட ஜிப்சம் உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் ஒரு தனிமமாகும். 4000 ஆண்டுகளாக அது தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. பிரமிடுகளின் உட்புறத்தின் பூச்சுவேலைகள் ஜிப்சத்தால் செய்யப்பட்டவை. தொழில்சாலைகளில் இப்போது ஜிப்சம் ஒரு பெரும் அளவில் பயன்படுத்தப்படுகின்றது. கட்டட பூச்சு வேலைகளில் இது சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

75 விழுக்காடு ஜிப்சம் பூச்சு வேலைகளுக்காகவும், அட்டைகள், ஓடுகள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் ஒரு முக்கியமான மூலப் பொருளாக இருப்பதாகும். உரம், காகிதம் மற்றும் ஜவுளி தயாரிப்பிலும் இது பயன்படுத்தப் படுகிறது. நவீன அமெரிக்க வீடுகள் ஒவ்வொன்றும் 7 டன் ஜிப்சத்தைக் கொண்டு கட்டப்பட்டவையாக உள்ளன.

பாரிஸ் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், குறிப்பாக மோன்ட்மார்டியில் உள்ள களிமண்ணில் அதிக அளவில் ஜிப்சம் இருப்பதால் அதனை பிளாஸ்டர் ஆஃப் பேரிஸ் என்று அழைக்கின்றனர்.

முழு உருவச்சிலைகள், மார்பளவு உருவச் சிலைகள், குடுவைகள், ஜாடிகள், தொட்டிகள் ஆகியவற்றைச் செய்யப் பயன்படுத்தும் வெள்ளை வெளேர் என்ற நிறம் கொண்ட, ஒளி ஊடுருவிச் செல்லும் பளிங்குக் கல் வடிவிலும் ஜிப்சம் கிடைக்கிறது.

இந்தப் பளிங்குக் கல்லை செயற்கை முறையில் வண்ணச் சாயம் ஏற்றி வெப்பப்படுத்தினால் அது சலவைக் கல் போலவே தோற்றமளிக்கும். பளிங்குக் கல்லைப் பொடியாக்கி எண்ணெயுடன் கலந்து பூசினால் கால் வீக்கம் போகும் என்று நம்பப்படுகிறது. இந்தக் கலவையைத் தயாரிப்பதற்காக தேவாலயங்களில் உள்ள சிலைகளை மக்கள் பெயர்த்து எடுப்பது சர்வசாதாரணமானது.

ஜிப்சம் என்ற பெயர் ஜிப்சோஸ் என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு சுண்ணாம்பு என்று பொருள்.
Previous
Next Post »

More News