இணைய பார்வையாளர் அனைவராலும் அறியப்பட்ட சீனாவின் வேகபாதை அமைப்பிற்கு தடையாக இருந்த 5மாடி வீடு ஒன்று
தற்போது உரிமையாளரிடம் ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் இடித்து உடைக்கும் நடவடிக்கை பாதை
திருத்தினர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
வேகப்பாதையில்
இந்த வீடு இருக்கும் இடம்வரை
வேகமாக வரும் வாகனங்கள் ஸ்லோவாகி,
வீட்டை சுற்றிச் செல்ல வேண்டும் என்ற
நிலை இதுவரை இருந்தது.
இந்த வீதி
அமைப்பதற்காக அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்ட போது,
இந்த வீட்டு உரிமையாளர் தமது
நிலத்தை கொடுக்க மறுத்த காரணத்தால்,
இந்த நிலை ஏற்பட்டிருந்தது. மறுப்புக்கு
காரணம் இந்த வீட்டு உரிமையாளர்,
அரசு வழங்கும் இழப்பீடு போதாது, அதை வைத்து
இதே போல மற்றொரு வீடு
கட்டிக்கொள்ள முடியாது என்று கூறியதுதான்.
மேலும், இந்த
விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமாகி
விடவே, இப்போது அரசு இறங்கி
வந்துள்ளது. வீட்டு உரிமையாளருடன் பேச்சுவார்த்தை
நடத்தி, அதிக இழப்பீடு (260,000 யுவான்)
தர சம்மதித்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர், தமது
நிலத்தை அரசுக்கு கொடுத்து விட்டார்.
எனவே, தனக்கு நிலம்
கிடைத்தவுடன், சுடச்சுட வீட்டையும் இடிக்கத் தொடங்கி விட்டார்கள். வீடு
இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இரு போட்டோக்களை தருகிறோம்.
ConversionConversion EmoticonEmoticon