கடந்த செய்வாக்கிழமை
தென் பிலிப்பைன்ஸில்
வீசிய கடுமையான சூறாவளி
காரணமாக சுமார் 40,000 பேர் தங்களது வீடுகளை
விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.
இந்த சூறாவளிக்கு 'போபா' எனப் பெயரிடப்பட்டுள்ள
இன்று
செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்டானோ பகுதியை
தாக்கியது. இடையிடையே மணிக்கு 210 கிலோ மீற்றர் வேகத்தில்
வீசிய காற்றுடனும் கடும் மழையுடனும் இந்த
சூறாவளியும் வீசியது.
இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு
காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இந்த சூறாவளி காரணமாக அங்கு
மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள்
தெரிவித்துள்ளன.
இவை தொடர்பான சேத
விபரங்கள் தொடர்பில் உடனடி அறிக்கைகள் எதுவும்
கிடைக்கப் பெறவில்லை.
இது போன்று கடந்த
வருடமும் தென் பிலிப்பைன்ஸில் வீசிய
'போபா' எனப் பெயரிடப்பட்ட இந்த
சூறாவளி காரணமாக சுமார் 1,500 பேர்
உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ConversionConversion EmoticonEmoticon