மத்திய கிழக்கில்
பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமதான் உள்ளன. இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை
அந்த பகுதி மக்கள் அனுபவிக்கின்றார்கள் என விமசகர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
ஜெருசலம்:ஃபலஸ்தீனில்
சட்டவிரோதமாக யூதர்களுக்கு வீடுகளை கட்டும் பணியில்
இஸ்ரேல் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. முன்னர் அறிவித்ததை விட
ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளை கட்ட
இஸ்ரேல் அரசு கடந்த புதன்கிழமை
தீர்மானித்துள்ளது.
முந்தைய
அரசுகள் செய்தது போலவே இம்முறையும்
தங்களது குடிமக்களை குடியமர்த்த கூடுதல் வீடுகளை கட்டுவதாக
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
அறிவித்துள்ளார். முன்னர் 1500 வீடுகளை கட்ட இஸ்ரெல் தீர்மானித்திருந்தது.
தற்பொழுது 2600 வீடுகளை கட்ட இஸ்ரேல்
அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத்
தவிர கிழக்கு ஜெருசலத்தில் 1048 குடியிருப்புக்களை
கட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்புக்களை
கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என்று
ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்பு
கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பினர்களை
கொண்ட ஐ.நா பாதுகாப்பு
கவுன்சிலில் அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு எதிரான
தீர்மானத்தை எதிர்த்தது. ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற
இயலாததால் 14 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும்
தனித் தனியாக அறிக்கை வெளியிட்டதாக
இந்தியாவின் பிரதிநிதி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்
குடியிருப்புக்களை கட்டுவதை நிறுத்தக்கோரும் தீர்மானத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி
மாதமும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி
ரத்துச் செய்தது. அதேவேளையில் இஸ்ரேல் உணர்ச்சியை தூண்டும்
வகையில் செயல்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா
நியூலாண்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்காசியாவில்
அமைதிக்கான முயற்சி முடங்கிப் போயுள்ளது
என்றும், ஆபத்தான முயற்சியில் இருந்து
இஸ்ரேல் விலகவேண்டும் எனவும் ஐ.நா
பொது அவை பொதுச்செயலாளர் பான்
கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக ஐரோப்பிய யூனியனின் கொள்கை உருவாக்க தலைவர்
காதரின் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புக்களை
கட்டுவதை இஸ்ரேல் அதிகரித்தால் அதன்
விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்று ஃபலஸ்தீன்
ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸின்
செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியிருப்புக்களை கட்டும் பணியை இஸ்ரேல்
தொடர்வதால் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைகள்
4 ஆண்டுகளாக நடக்கவில்லை. ஃபலஸ்தீனுக்கு அண்மையில் ஐ.நா கண்காணிப்பு
நாட்டுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் குடியிருப்புக்களை கட்டுவதை
அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ConversionConversion EmoticonEmoticon