உலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்


கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் சிலையாகுமா? என்று எழுதி வைத்தான் ஒரு கவிஞன்.
கல்லானது மாணிக்க கல்லானால் அதுவும் இந்திர நீல கல்லானால் அதன் கரட் ஒன்றின் பெறுமதி 36 ஆயிரம் அமெரிக்க டொலாகும். இந்தக்கல் இப்போது ஹொங்கோங் நகரில் கடந்த 23ஆந் திகதி விலைபோனது.

இலங்கையின் இந்திர நீல மாணிக்க கல்லுக்கு உலக சந்தையில் அதிக விலை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த மாணிக்க கல் 43.16 கரட் எடை கொண்டது எனவும், 120 லட்சத்து 84 ஆயிரம் ஹொங்கோங் டொலருக்கு விலை போயுள்ளது. இதன் ஊடாக புதிய உலக சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

இது போல் முன்னரும் இலங்கையில் இருந்து பெறப்பட்ட மாணிக்க கல் ஒன்றே அதிக விலைக்கு விற்பனையானது என்ற சாதனையை இதுவரையிலும் கொண்டிருந்தது. அதனை இந்த மாணிக்கக் கல் முறியடித்துள்ளது.

இந்த புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ள இந்த மாணிக்க கல்லை உள்ளடக்கிய மோதிரத்தை வடிவமைத்தவர், பிரித்தானிய அரச குடும்பத்தின் எலிசபெத் டெயிலர், உள்ளிட்ட கிரேஸ் கெனி போன்ற ஹொலிவுட் நடிகைகளின் ஆபரண வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous
Next Post »

More News