இற்றைக்கு பல வருடங்களுக்கு
முன்னர் அதாவது 1950ஆம்
ஆண்டுகளில் நிலவை அணு குண்டு
வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டம்
தீட்டியது செய்தியான இப்போது பத்திரிகையில் கசியத்
தொடங்கியுள்ளன.
மேலும், இது தொடர்பாக
தி
டெய்லி மெயில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள
செய்தியில் தெளிவான முறையில் சுட்டிகாட்டியுள்ளது.
தனதறிக்கையில்
1950ஆம் ஆண்டுகளில் நிலவை அணு குண்டு
வைத்து தகர்க்க 'புராஜெக்ட் ஏ119' என்ற திட்டத்தை
அமெரிக்கா தீட்டியது.
தனக்கு பாதுகாப்பான
இடத்தில்
இருந்து சிறிய அணு குண்டை
நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
ஹைட்ரஜன்
குண்டை விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக
இருக்கும் என்பதால் அணு குண்டை பயன்படுத்த
முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தினால்
புவியில் உள்ள உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு
இந்த முயற்சி அப்போது தோல்வி கண்டன. அத்துடன் மேலும் விபரீதங்களை
கருத்தில் கொண்டு இராணுவ அதிகாரிகள்
இம்முயற்சியைக் கைவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
சோவியத் யூனியன் ஸ்புட்னிக் என்ற
விண்கலத்தை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத் திட்டத்தைத் தீட்டியதாகவும்,
சோவியத் யூனியனை விட தானே
வலிமையானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த
திட்டத்தை தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon