இலங்கை-
மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த
இருபது -20 உலகக் கிண்ண இறுதிப்
போட்டியுடன் அவுஸ்திரேலிய நடுவர் சைமன் டவ்பல்
ஓய்வு பெற்றார்.
சர்வதேச
கிரிக்கெட் கவுன்சிலின் சிறப்பு நடுவர் குழுவில்
இடம்பெற்றுள்ள டவ்பல் இதுவரை 74 டெஸ்ட்
போட்டிகள், 174 ஒருநாள் போட்டிகளிலும் பணியாற்றியுள்ளார்.
2004ம் ஆண்டில் இருந்து 2008ம்
ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை
ஐ. சி. சி. சிறந்த
நடுவர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய
போட்டியில் இவர் பாகிஸ்தானின் அலிம்
தாருடன் இணைந்து கள நடுவராகப்
பணியாற்றினார். தனது ஓய்வு தொடர்பில்
அவர் அளித்த பேட்டியில் “நான்
நடுவராக பணியாற்றிய காலத்தில் மறக்க முடியாத சில
தருணங்கள் உண்டு.
அதில்
2011ம் ஆண்டு ஒரு நாள்
போட்டி உலகக் கிண்ணத்தில் மொகாலியில்
நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிக்கு நடுவராகச்
செயல்பட்டதை குறிப்பிட்டுச்சொல்ல முடியும். இரு நாட்டு பிரதமர்கள்
அந்த ஆட்டத்தை நேரில் பார்த்தனர். பரபரப்பாகவும்,
உணர்ச்சிகரமாகவும் இந்த போட்டி அமைந்தது.
அந்த உலகக் கிண்ணத்தில் இரண்டு
இறுதிப் போட்டிகள் நடந்ததாக உணர்ந்தேன். ஏனெனில், அந்த அரை இறுதியும்
இறுதிப்போட்டி போன்றே இருந்தது” என்றார்.
ConversionConversion EmoticonEmoticon