தென்கிழக்காசியிவின்
தீவு என எல்லோராலும் சித்தரிக்கப்படும் ஒரு சிறிய தேசமான இலங்கை தனது முதலாவது செய்மதியை
சீனாவின் உதவியுடன் விண்ணுக்கு ஏவியதன் மூலம் அந்த நாட்டின் நீண்ட நாள் கனவாக இருந்த
கனவு இன்று நிஜமாகிய அதிசயத்தை நாங்கள் காண்கின்றோம்.
இலங்கையின்
முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 2 இன்று மாலை
இலங்கை நேரப்படி 4 :00 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது
இது தொடர்பான தகவலை
குறித்த செய்மதி செயற்றிட்டத்தில் தலைமை
நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ்
தெரிவித்தார்.
இந்த செய்மதியைத்
தாங்கிய விண்கலம் தனது ஓடுபாதை இலக்கை
நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர்
குறிப்பிட்டார்.
கடந்த வாரம் காலநிலை சீர்கேடு
மற்றும் இலத்திரனியல் பிரச்சினை என்பன காரணமாக அதன்
பயணம் பிற்போடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன் உண்மைத்தன்மையை
சுப்ரீம் சட் செயற்திட்ட நிறைவேற்று அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி சுப்ரீம்
சட் செய்மதி, சீனாவில் உள்ள சிசாகில் என்ற
தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது
மேலும் இந்த செய்திமதி
இலங்கைக்கு மேல் உள்ள அண்டவெளியில்
நிலைகொள்ளச் செய்யப்படும் என்றும அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
22ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த
நிலையிலும் 5 நாட்கள் தாமதமாகி இன்று விண்ணுக்கு
ஏவப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட சுமார்
360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள
இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன்
மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப்
பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பாயினும் இந்த
செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டி பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு
செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை
வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதுடன் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு
என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon