இலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்ப வசதி


மார்பகம், கர்ப்பப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவர் நிலையம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இதனை மேற்கொள்ளும்.

20 வினாடிகளில் இத்தகைய புற்றுநோய் உருவாகி உள்ளதா? என்பதைக் கண்டு கொள்ளும் புதிய இரு தொழில்நுட்பத் தொகுதிகள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பு நாரேன்பிட்டியிலும் திறக்கப்பட்டுள்ளன.

 இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் உள்ளதா? இல்லையா? என்பதனை கண்டு கொள்ளலாம். இலங்கையில் 100 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதில் 70 வீதமானோர் நோயின் இறுதிக் கட்டத்திலேயே நோய் பற்றி அறிகின்றனர்.

முன்கூட்டியே அறிந்துகொண்டால் உயிராபத்தை தவிர்க்கலாம். 700 சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை வசதிகள் இருந்தும் பெண்கள் இப்பரிசோதனைகளை மேற்கொள்ளாமை கவலை தருவதாகும். இதனால் மரணம் சம்பவிக்கலாம். இரு நாட்களில் ஆகக்குறைந்தது மூன்று பேராவது கர்ப்பப்பை புற்றுநோயால் மரணிக்கின்றனர்.

யாழ். போதனா ஆஸ்பத்திரியில் இப்பிரிவு சனியன்று திறந்து வைக்கப்பட்டது. தேசிய புற்றுநோயாளர் ஒழிப்பு வேலைத் திட்டப் பணிப்பாளர் டொக்டர் நீலமனி பரணகம, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவர் நிலைய பிரதானி டொக்டர் ஆர். சங்கரநாராயணன் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Previous
Next Post »

More News