தனக்கு ஏற்பட்ட
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.
குஜ்ரால் (வயது 92) இன்று (30.11.2012) மாலை 3.27க்கு காலமானார். 1997-ம்
ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்
1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம்
வரை நாட்டின் 12-வது பிரதமராக பதவி
வகித்தவர் ஐ.கே. குஜ்ரால்.
இவரின் வரலாறு
ஏட்டிலிருந்து....
1919-ம்
ஆண்டு டிசம்பர் 4-ந் திகதி பிறந்த
பஞ்சாப்பின் ஜீலம் பகுதி (தற்போது
பாகிஸ்தானில் இருக்கிறது) ஐ.கே.குஜ்ரால்,
1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு
போராட்டத்தில் பங்கேற்றவர் தனது தேசப்பற்றை தெரிவித்தார்.
தொடக்கத்தில்
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே. குஜ்ரால், 1975-ல்
அதாவது எமர்ஜென்சி அறிவிக்கப்படும்போது தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை
அமைச்சராக இருந்தவர் குஜ்ரா. பின்னர் சோவியத்
யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.
1980களில்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில்
இணைந்தார். 1989-ல் பஞ்சாப்பின் ஜலந்தர்
எம்.பி. தொகுதியில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங்
அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
1996-ம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும்
வெளியுறவுத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் ஐக்கிய
முன்னணியின் தலைவராக ஐ.கே.
குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13மாதங்கள்
இந்தியாவின் 12-வது பிரதமராக பதவி
வகித்தார்.
ConversionConversion EmoticonEmoticon