உலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டுமா?


ஓசோன் படை தேய்வின் விளைவுகள் என்பது புவியின் வளி மண்டலத்தில் அதிகளவை உள்ளடக்கிய ஓசோன் படையின் தேய்வினால் புவியின் சூழலில் ஏற்படும் மாற்றங்களை யும் பிரச்சினைகளையும் குறிக்கும்.

ஓசோன் படையானது படை மண்டலத்தில் உள்ள பகுதியாகும். இப்பகுதி புவியின் வளிமண்டலத் தின் அதிகளவான பகுதியை (90%) உள்ளடக்கி உள்ளது. இப்பகுதி புவியின் மேற்பரப்பில் இருந்து 10 - 25 மைல் (15-40 கி. மி.) உயரத்தில் அமைந்துள்ளது. இப் படையானது சூரியனில் இருந்த வீசப்படும் புற ஊதாக்கதிர்களிட மிருந்து பாதுகாப்பு கவசமாக செயற்படுகின்றது.

ஓசோன் ஒட்சிசனின் விசேடமான ஒரு வடிவமாக உள்ளது. மூன்று ஒட்சிசன் அணுக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

சாதாரண இரு அணுக்களினை கொண்ட ஒட்சிசனை விட விசேட அமைப் பினைக் கொண்டது. ஓசோன் ஆனது படை மண்டலத்தின் தாழ்ப்பகுதியில் ஒட்சிசன் மற்றும் உயர் ஆற்றல் வாய்ந்த சூரியனில் இருந்து வெளியே ற்றப்படம் கதிர்வீசலின் மூலமும் உற்பத்தி யாகின்றது.

படை மண்டல ஓசோன் படையானது புவிக்கு நன்மை பயப்பிக்கும் விதத்தில் செயற்படு கின்றது. புற ஊதாக்கதிர் வீசல் புவியின் மேற்பரப்பை அடையா வண்ணம் தடுக்கின்றது. அறிவிய லாளர்கள் 1920 இல் ஓசோன் படையினை கண்டுபிடித்த காலத் தில் இருந்து அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடு கள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

1974 இல் இரசாயனவியலாளர் கள் சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகளின் மூலம் வளிமண்டலத்தில் வெளியிடப் படும் பொருட்களினால் ஓசோன் படைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் பல்வேறுபட்ட எதிர்விளைவுகள் ஏற்படுவதுடன், அதனைத் தடுப்பதற்கான சட்ட திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. அதேவேளை ஓசோன் படை தேய்வுக்குக் காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உலகிலுள்ள அனைத்து மக்களையும் சார்ந்துள்ளது.

ஓசோன் தேய்விற்கு ஓசோன் தேய்வடைய செய்யக் கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Suhstances)  காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன், இதற்குக் காரணமாக குறிப்பிட்டுக் காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. அல்லது பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக குளோரோ புளோரோ காபன், காபன் தெட்ராகுளோரைட், ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் மற்றும் மெதில் புரோமைட் போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குக் காரணமாக உள்ளன. இவ்வூறு விளைவிக்கும் காரணிகள் மேல் வளிமண்டலத் தினை அண்மித்தவுடன் சக்தி வாய்ந்த அவற்றின் அணுக்களை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது.

அப்பொருட்களை உருவாக்கியுள்ள அணுக் கள் அனைத்தும் விடுவிக் கப்படுகின்றன. உதாரண மாக குளோரீன் மாற்றும் புரோமின் அணுக்களைக் குறிப் பிடலாம்.

இவ்வாறு விடுவிக்கப் பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது. பிற பொருட்களை சேதமடையச் செய்யும் செயற் பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்ட லத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக் கூடிய திறன்வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.

குளோரின் மற்றும் புரோமின் அணுக்களின் ஒன்றுகூட லானது மேல்வளி மண்டலத்தில் ஓசோன் அழிவு செயற்பாட்டினை துரிதப் படுத்தியதன் விளைவாக சிறப்பாக முனைவுப்பகுதிகளில் ஓசோனின் அளவினை தாழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. 1980 இல் பாரதூர மாக ஓசோனின் அழிவிற்கு ஹலோகனின் அழிக்கக் கூடிய நடவடிக்கைகள் காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட் டுள்ளதுடன் அதனையே ஓசோன் துவாரம் (Ozone hole) எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஓசோன் படையானது புவிக்கும் அதன் உயிரியல் முறைமைக்கும் பாதுகாப்பு கவசமாக செயற்படு கின்றது. இப்படையானது சூரிய னில் இருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்வீசலினை உறிஞ்சிக் கொள்வதுடன் புவியின் மேற்பரப் பினை அடையும் அளவினையும் குறைக்கின்றது.

ஓசோன் படையின் மட்டம் குறைவடைவதனால் புற ஊதாக்கதிர் அளவு அதிகரிப்பதுடன், மனித சுகாதாரம் மற்றும் சூழலுக்கு தீங்கு தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஆராய்வுகளின் படி புறஊதாக் கதிர் வீசலுக்கும் தோல்புற்றுநோய்க்கும் இடையில் திட்டமானதொரு உறவு நிகழ்வ தாகக் கூறப்படுகின்றது.

கதிர்வீச லினால் கண நோய்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறானது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. தரை மேற்பரப்பை அடைவதுடன் அதனை உட்சுவாசிக்கும் போது நச்சுவாக மாறி சுவாசத் தொகுதி பிரச்சினைகளையும் உருவாக்கு கின்றது. உயர் புற ஊதாக்கதிர் மட்டமானது சில உயிர் வாழ் நுண்ணியிர்களின் வாழ்வை பாதிக்கின்றது.

உதாரணமாக நுண்ணுயிர்களானது பல தாவரங் களின் நைதரசன் நிலைநாட்டுகை செயற்பாட்டில் பிரதானதொரு பங்கினை வகிக்கின்றன. தாவரங்கள் புறஊதா கதிர்வீசலு க்கு இலகுவில் பாதிப்படைகின் றன. கதிர்வீசல் தாவர வளர்ச்சி யினை பாதிக்கின்றபடியினால் தாழ்மட்ட விவசாய உற்பத்திக்கு ஏதுவாகின்றது.

இதன் காரணமாக பிளான் தன்களும் பாதிப்படைகின்றன. அதேவேளை பிளான்தன்கள் உணவு வலையின் முதல் நிலை உற்பத்தியாக்கிகளின் ஜீவாதாரமானவையாகும். சமுத்திரத்தின் பிளான்தன்களின் அளவு குறைவடைதலாகாது. மீன்களின் அளவு குறைவடைவ தற்கு வழிவகுக்கின்றது.

ஓசோன் படை தேயிவினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

குளிர்சாதனப் பெடடிகள், குளிரூட்டிகள் போன்றவற்றின் பாவனையானது ஓசோன் தேய்வு பொருட்களான குளோரோ புளோரோ காபன் ஐதரோ குளோரோ காபன் போன்றவற்றினை வெளியிடுவதுடன் புவியின் நிலையான வாழ்க்கைக்கு பொறுப்பான சூழலுக்கு அபாயத்தினையும் விளைவிக்கின்றது.

உலக மக்கள் ஓசோன் படை தேய்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் எமது எதிர்கால சந்ததிகள் அதன் எதிர் விளைவினை சந்திக்க வேண்டி ஏற்படும். ஓசோன் தேய்வானது அதற்கு சேதம் விரைளவிக்கம் பொருட்கள் வெளியேற்றப்படும் பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட தேசத்திற்கோ மட்டும் தர்க்கத்தினை ஏற்படுத்துவதில்லை. உலகின் முழு சனத்தொகையுமே அதன் தாக்கத்திற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின் பின்பு உலகின் அனைத்து சமூகங்களும் இணைந்து 1985 இல் ஓசோன் படையினை பாதுகாப்பதற்காக வியன்னா மகா நாட்டினை உருவாக்கின.

இச்சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அதாவது, 1987 இல்மோன்றியல் சாசனம் ஓசோன் தேய்வுப்பொருட்களை வெளியிடுவதனைத் தடுப்பது தொடர்பாக உருவாக்கப்பட்டது. CFC, HCFC மற்றம் ஏனைய தேய்விற்கு பொறுப்பான பொருட்களை வெளியிடாது ஊழல் நட்பான ஓசோனுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்களை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

ODS பொருட்களை உற்பத்தி செய்வது. நுகர்வது ஆகியவற்றினை கட்டுப்படுத்தல் ODS இன் சர்வதேச வர்த்தகத்தினை கட்டுப்படுத்தல்

ODS இன் வருடாந்த உற்பத்தி தரவுகளைப் பேணல். அபிவிருத்தியடைந்த நாடுகள் பலபக்க நிதியுதவியினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கி மாற்று தொழில்நுட்பங்களை ODS வெளியேற்றத்திற்கு பயன்படுத்த கோரியதில் சிறந்த பலன்கள் ஏற்பட்டுள்ளன. 192 நாடுகள் இதில் கையெழுத்திட்டு கொள்கை உருவாக்கியுள்ளன.

மானிட காரணிகள் மூலம் வெளியிடப்படும் பொருட்கள் ஓசோனின் உற்பத்தியை விட அழிவை துரிதப்படுத்துவதினால் இயற்கை சமநிலை குலைகின்றது. மோன்றியல் சாசனத்தின் மூலம் ஓசோனின் மீள் உற்பத்தி நடவடிக்கையினை ஊக்குவிக்கும் தொழிற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன.

கைத்தொழில் குழுக்கள் சூழல் நட்பு முறையிலான பாதுகாக்கப்பட்ட மாற்று முறைமைகளை கையாள முனைந்து வருகின்றன. தொழில்நுட்பத்தினூடாக மாற்றுத் திட்டங்களை அபிவிரத்தியடைந்து வரும் நாடுகளும் அமுல்படுத்துவதனை ஊக்குவித்து வருகின்றன. மொன்றியல் சாசனமானது வழக்கத்தை மாற்றி புதுமையைப்புகுத்தும் விடயங்களையும் தொழில் நுட்பத்தினூடாக அவற்றின் வியாப்பித்தலினையும் சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான தடைகளை அகற்றுதலையும் செய்து வருகின்றது.

உலக ரீதியாக நகரும் குளிரூட்டிகள் சூழல் நட்பு தொடர்பான நுட்பங்களுக்கு மாற்றப்பட்டு ஓசோன் படையினை பாதுகாப்பதுடன் அதேவேளை ODS பொருட்களினால் ஏற்படக் கூடிய காலநிலை மாற்றங்களும் குறைக்கப்படுகின்றன.

பாரிய கைத்தொழில் நிறவனங்கள் புதிய ஓசோன்- நடான தொழில் நுட்பங்களை புகுத்துவதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுள்ளன. ஆனால் சிறிய கைத்தோழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான அறிவினை தேசிய ரீதியாக மீள் சுழற்சி மற்றும் மீள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் ODS இன் உற்பத்தியினை குறைக்கக் கூடியதாக உள்ளது.

மொன்றியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கொள்கைகளின் அமுலாக்கங்களானது ODS வளி மண்டலத்திற்கு ஏற்படுத்தும் கேடுகளைக் குறைப்பதுடன், குறிப்பிடத்தக்களவில் காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவ தற்கும் காரணமாக அமைந்துள் ளது. மொன்றியல் சாசனம் காலநிலை மீதான தாக்கங்களைக் குறைப்பதற்கு புதிய உபாய முறைகளை அபிவிருத்தி செய்ய ஊக்குவிக்கின்றது.

மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தியை குறைக்கவும் உதவுகின்றது. பல ஓசோன் தேய்வுப் பொருட்களை விசி வாயுக்கள் கொண்டுள்ளன. மொன்றியல் பிரகடனமானது அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ODS பொருட்களின் பாவனையை குறைக்கவும் மற்றும் ஓசோன் தேய்வினை தாழ்நிலையில் வைத்திருக்கவும் பூகோள வெப்பமடைதலினை (Global Warming) தாழ்நிலையில் வைத்திருக்கவும் ஊக்குவிக்கின்றது.

இலங்கை CFC அல்லது ODS இனை அடிப்படையாக வைத்த உபகரணங்களையோ உற்பத்தி செய்யவில்லை. எவ்வாறிருப்பினும் அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் மொன்றியல் பிரகடனத் தில் கைச்சாத்திட்ட நாடு என்ற ரீதியில் சாசனத்தில் உள்ளள இலக்குகளுக்கு கட்டுப்பட்டிருத் தல் வேண்டி உள்ளது. குளிர்சாதன தொழிற்சாலைகள் ODS இனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை ODS தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதனை பலபக்க நிதிவசதிகளின் உதவியுடன் செய்துவருகின்றது.
Oldest

1 Comments:

Click here for Comments
S. Robinson
admin
November 27, 2012 at 7:33 AM ×

தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

Congrats bro S. Robinson you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

More News